காலா படத்தின் நாயகி இந்த பொண்ணா..? அவர் நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா..?


சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் பட்டைய கிளப்பி வருகிறது இந்த டீசரில் வரும் ஒவ்வொரு வசனமும் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வருகிறது. இந்த நிலையில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரிராவ் நடித்துள்ளார்.

இயக்குனர் ரஞ்சித் கபாலி படத்திலும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நடிகையான ராதிகா ஆப்தேவை நடிக்க வைத்தார்


அதேபோல் இந்த படத்திலும் தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு கொள்ளாத ஈஸ்வரிராவ்வை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைத்துள்ளார்.

இவர் யார் இவர் இதுவரை எந்த படத்தில் நடித்துள்ளார் என்பதை பார்ப்போம், இவர் விஜய் நடிகராக நடித்த நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடித்துள்ளார் ஈஸ்வரிராவ் என்பது உங்களுக்கு தெரியுமா, ஆம் அந்த படத்தில் வின்னுசக்கரவர்த்தி மகளாக ராணி என்ற கேரக்டரில் நடித்தவர்.

அதன் பின்பு பாலுமகேந்திராவின் ராமன் அப்துல்லா, பிரகாஷ்ராஜின்- குருபார்வை, சரத்த்குமாரின்- சிம்மராசி வாசந் இயக்கிய அப்பு, விஜயகாந்த் நடித்த தவசி, சிம்பு நடித்த சரவணா என பல படத்தில் நடித்துள்ளார்


மேலும் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணசித்திர நடிகை என்ற விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இதுவரை 10 படத்திற்கும் மேல் நடித்துள்ளார் மேலும் தெலுங்கு, மலையாளம் போன்ற படத்திலும் படித்துள்ளார் இவர் ரசிகர்களால் கண்டுகொள்ளாத நடிகையாகவே இருந்தார் ஆனால் காலா படத்தில் நடித்து புகழின் உச்சிக்கே செல்ல இருக்கிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி