முதல் நிகழ்ச்சியிலேயே அவமானப்பட்ட ஜீலி..!மேடையில் கதறி அழுத பரிதாபம்!!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் போலி என்று பெயரெடுத்த ஜூலி தமிழக மக்களிடம் பெரும் வெறுப்பை சம்பாதித்தார். வெளியில் வந்தாவது தனது கேரக்டரை மாற்றி கொண்டாரா என்றால் இல்லை.

சமீபத்தில் ஜூலியிடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பில் உள்ளார்களா என கேட்கப்பட்டது. அதற்கு ஹரீஷ் தினமும் போன் செய்கிறார் என கூறினார்.

இது குறித்து ஹரீசிடம் கேட்டபோது இல்லை நான் ஒரு முறைதான் பேசினேன் என்று ஜூலியின் பொய்யை மீண்டும் அம்பலப்படுத்தினார்.

மேலும் ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சின்னத்திரை தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம்.


இந்த ஆசை கலைஞர் டிவி வாயிலாக நிறைவேறி உள்ளது. இதில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை கோகுலுடன் தொகுத்து வழங்குகிறார். இதன் முதல் எபிசோட்டிற்கான படப்பிடிப்பு நடந்தது.

அப்போது குழந்தைகள் முன்பு என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதனை கேட்ட குழந்தைகள் அக்கா எங்கள் வீட்டில் எல்லோரும் உங்களை திட்டி கொண்டே இருப்பார்கள்.

உங்களை மாதிரி இருக்க கூடாது என்று கூறுவார்கள் என்று கூறினர். மேலும் குழந்தைகள் ஓவியா ஓவியா என்று கத்தினர்.

இதனால் அவமானம் அடைந்த ஜூலி மேடையிலேயே அழுது விட்டாராம். பின்னர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அவரை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை மீண்டும் தொடர்ந்து எடுத்தார்களாம்.

இதற்கு காரணம் அவருக்கு எங்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியவில்லை என்பதுதான். இதனை தெரிந்து கொண்டால் ஜூலி சின்னத்திரையில் தொடர்ந்து சாதிப்பார் என்று அவரை சார்ந்தவர்கள் கூறி உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!