எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக நடிகர்கள் கள்ள சாராயத்தை ஆதரிக்கிறார்கள் என்று இல்லை – சார்லி

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் உயிர் பிழைத்த 65 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.சி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக அனைத்து நடிகர்களும் கள்ள சாராயத்தை ஆதரிக்கிறார்கள் என்பது இல்லை என்று நடிகர் சார்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக அனைத்து நடிகர்களும் கள்ள சாராயத்தை ஆதரிக்கிறார்கள் என்பது இல்லை. எது தன்னை இழக்க செய்யுமோ அதை செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நடிகர்கள் ஒவ்வொரு விஷயத்திற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. கள்ள சாராயம் என்பது தவறு அப்படி நான் கூறுவேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் சாராயம் என்பதே தவறு மது அருந்துவது முற்றிலும் தவறு என்ற கொள்கையுடையவன் நான். முழுக்க முழுக்க தன்னை இழக்க செய்யும் எந்த ஒரு போதை பழக்கத்தையும் மக்கள் பின்பற்றக் கூடாது” என்று கூறினார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!