விஜய் குரலில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘ரஞ்சிதமே’ பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.







  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!