ஜப்பானில் வெளியாகும் விஜய் படம்.. கொண்டாடத்தில் ரசிகர்கள்

இந்திய திரைப்படங்களை ஜப்பானில் வெளியிடுவது வழக்கம். ரஜினிகாந்தின் முத்து படத்துக்கு ஜப்பான் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பினால் அவர் நடித்த மேலும் பல படங்களை ஜப்பான் மொழியில் டப் செய்து தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

கார்த்தி நடித்த கைதி படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை சில தினங்களுக்கு முன்பு ஜப்பானில் ரிலீஸ் செய்தனர். அந்த படம் திரையிட்ட முதல் நாளே ரூ.1 கோடி வசூலித்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த மாஸ்டர் படத்தையும் ஜப்பான் மொழியில் டப் செய்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் ஜப்பானில் நூற்றுக்கணக்கான தியேட்டர்களில் திரையிடவுள்ளனர். தற்போது ஜப்பான் மொழி வாசகங்களுடன் மாஸ்டர் பட போஸ்டரை நகரம் முழுவதும் பல இடங்களில் ஒட்டி வருவதாக கூறப்படுகிறது.






இந்த பதிவு உங்களுக்கு பிடித்திள் நண்பர்களுடன் பருந்தால் உங்ககிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!