வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும் – நடிகை குஷ்பு

சென்னையில் நேற்று கோவை சரளா, ராஜாத்தி பாண்டியன், சார்லஸ் வினோத் உள்ளிட்ட நடித்திருக்கும் ஒன் வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், எழில் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்துக் கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, ‘வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றார்.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் குறித்தும், அதன் மீது வைகக்ப்படும் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “வரலாறு பற்றி ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்கமாட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாற்றை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை” என்றார்.

நீங்கள் ஏன் காவி உடை அணிந்திருக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த குஷ்பு, “இதை பார்த்தால் உங்களுக்கு காவி மாதிரி தெரிகிறதா. உங்கள் அருகில் இருப்பவரும்தான் காவி உடை போட்டிருக்கிறார். அவரிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை. பச்சை நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ உடை அணிந்து வந்தால் ஏன் அப்போது இப்படி கேட்கவில்லை. காவி என்பது நிறம் அவ்வளவுதான்” என்று கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு நடிகை குஷ்பு காவி உடை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!