ஒரு நாளை இனிதாக்க ஒரு துளிக் காதல் போதுமானது.. பார்த்திபன் நெகிழ்ச்சி

1989-ஆம் ஆண்டு வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். அதன்பின்னர் பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல், ஒத்த செருப்பு உள்ளிட்ட பல படங்களை இயக்கி தனக்கான இடத்தை பிடித்தார். தன்னுடைய படங்களில் வித்யாசமான புது முயற்சிகளை செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வந்தார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், ஒரு நாளை இனிதாக்க ஒரு துளிக் காதல் போதுமானது. அக்காதல் ஒருவர் மீதொருவர் வைப்பதாக மட்டுமல்லாமல், ஒரு மையப் புள்ளியின் மீது இரு பார்வைகள் வைக்கும் காதலாகக் கூட இருக்கலாம். அம்மையத்தின் பெயர் சினிமா. பெயரை குறிப்பிடாமல்’என் சினிமாவுக்கு. சினேகமுடன்’என எழுதி தி.ஜா-தொடரும் என்று குறிப்பிட்டு நடிகர் கமலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!