ஜெயிலர் படத்தில் நான் நடிக்கவில்லை.. அதிரடியாக அறிவித்த பிரபல நடிகை

பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனத்தால் சுதாரித்துக் கொண்ட நெல்சன் தற்போது ஜெயிலர் திரைப்படத்தை மிகவும் கவனமுடன் இயக்கிக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலை தூண்டி உள்ளது.

இதில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்து வரும் ரஜினி தற்போது படப்பிடிப்பில் பயங்கர ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறாராம். அவருடன் இணைந்து கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா மோகன் ஜெயிலர் திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஏனென்றால் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக பல நாட்களாகவே செய்திகள் இணையதளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் நெல்சனின் டாக்டர் திரைப்படத்தில்தான் அவர் நாயகியாக அறிமுகமானார். அதிலிருந்து அவர் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் நெல்சனின் வார்த்தைக்கு அதிக மதிப்பு கொடுத்து வருகிறார். இதனாலேயே அவர்கள் இருவரை பற்றியும் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளிவந்தது.

அதன் காரணமாகவே ஜெயிலர் படத்தில் பிரியங்காவுக்கு நிச்சயம் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்படும் என்ற பேச்சும் அடிபட்டது. ஆனால் தற்போது அந்த செய்தியை பிரியங்கா முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது நான் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கிறேன் என்று ஒரு வதந்தி பரவி வருகிறது.

ஆனால் அது உண்மை கிடையாது. அந்த படத்தில் நடிப்பதற்கான எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறி இருக்கிறார். அவர் கூறிய இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் பிரியங்காவிடம் இந்த படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

நெல்சனுடன் இருந்த கிசுகிசு தான் அவர் இந்த வாய்ப்பை மறுப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பல நடிகைகளும் ரஜினியுடன் நடிப்பதற்கு போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரியங்கா மோகன் இந்த வாய்ப்பை மறுத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. தற்போது அவர் ஜெயம் ரவியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!