வாரிசு ஷூட்டிங் முடிக்கப்பட்டது இதனால் தானா? டோலிவுட்டில் தொடங்கிய பிரச்சனை

விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அது முடிக்கப்பட்டு இருக்கிறது. அடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடத்த இருப்பதாக தெரிகிறது.

தெலுங்கு சினிமா துறையினர் வேலைநிறுத்தம் அறிவித்து இருப்பது தான் அதற்கு காரணம்.
வேலைநிறுத்தம்

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பல தெலுங்கு படங்கள் ஹிந்தியிலும் ஹிட் ஆகி பான் இந்தியா ஹிட் ஆகி இருக்கின்றன. அதே நேரத்தில் படங்களின் தயாரிப்பு செலவுகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

அதற்காக பேச்சுவார்த்தை நடத்தி அனைத்தையும் சரிசெய்ய பேச்சுவார்த்தை நடந்து முடிவுகள் எடுத்தபிறகு தான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும், அதுவரை அனைத்து பணிகளும் நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருக்கின்றனர்.

விஜய் சம்பளம் தான் காரணமா
வாரிசு படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். விஜய் வாரிசு படத்திக்காக சுமார் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.

மேலும் தனுஷ் நடிக்கும் வாத்தி, ஷங்கர் இயக்கும் RC15 என பல தமிழ் நட்சத்திரங்கள் தெலுங்கில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வாங்கும் சம்பளம் அதிகமாக இருப்பதால், மற்ற தெலுங்கு நடிகர்களும் சம்பளத்தை அதிகரிக்க கேட்கிறார்களாம்.

இதனால் தான் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பிரச்சனை எழுந்திருக்கிறது. அது தான் தற்போது ஸ்டிரைக் வரை சென்றிருக்கிறது என சொல்கிறார்கள். 


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!