சிவி-2 – விமர்சனம்

2007ல் வெளியான “சிவி” படத்தில் பேய் செய்த கொலையையும் அந்த ஆஸ்பத்திரியிலுள்ள அமானுஷ்யத்தையும் சில காலேஜ் ஸ்டுடண்ட்ஸ், மக்களிடம் யூட்டியூப் லைவ் செய்து பணம் ஈட்ட நினைக்கிறார்கள். அப்போது தேஜ் சரண்ராஜ் அவர்களுக்கே தெரியாமல் மாயாஜால வேலைகள் செய்து வியூஸ்களை அள்ளிவிடுகிறார்.

இதனால் தன் சாவுக்கு காரணமானவர்களை முதல் பாகத்திலே பழி வாங்கிய நந்தினி, தற்போது இந்த மாணவர்களின் செயல்களை கண்டு கோபப்படுகிறார். இறுதியில் மாணவர்களை நந்தினி என்ன செய்தார்? அந்த மாணவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து சீக்குவல் படம் இயக்க நினைத்த இயக்குனர் கே.ஆர்.செந்தில் நாதனுக்கு பாராட்டுக்கள்.

ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். தேஜ் சரண்ராஜ் தனது பாத்திரத்தின் வலுவை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை நம் கண்டிராத மிக அழுத்தமான கதாபாத்திரத்தில் சாம்ஸ் நடித்திருக்கிறார்.

கதைக்கு பக்கபலமாய் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். அவர்கள் திகிலடைவது மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து திகிலடைய வைக்கிறார்கள். பி.எல். சஞ்சயின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. திகில் படத்திற்கு ஏற்றாற் போல் இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர்.

மொத்தத்தில் “சிவி-2” பயம் குறைவு.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!