மீண்டும் நடிக்க வருவாரா நடிகை காஜல் அகர்வால்.. வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

மீண்டும் நடிக்க வருவாரா காஜல்
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்தவர் காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் தீடீரென தான், கமிட்டாகி இருந்த அனைத்து படங்களில் இருந்தும் விலகினார்கள். காரணம் அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார்.

இதன்பின், சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் காஜல். தன்னுடைய மகனின் புகைப்படத்தை கூட சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

நடிகை காஜல் அகர்வால் மீண்டும் எப்போது நடிக்க வருவார் என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளத்தில் எழுந்துள்ளது. ஏற்கனவே காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்த சில திரைப்படங்களில் இருந்து தான், கர்ப்பமாக இருந்ததால் காஜல் வெளியேறினார்.

இந்நிலையில், அடுத்த பல மாதங்களுக்கு தனது குழந்தை வளர்ப்பில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளதாகவும், 2023ல் புதிய படங்களில் நடிக்க காஜல் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!