கிராண்மா – விமர்சனம்

பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீட்டில் வக்கீல் பிரியா (விமலா ராமன்) வாழ்ந்து வருகிறார். இவருடைய பிடிவாத குணம் கொண்ட இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் நிக்கி (பௌர்ணமி ராஜ்) அவருடன் வாழ்ந்து வருகிறார். அவளுக்கு வீட்டிலேயே தங்கி டீச்சர் திரிஷா (சோனியா அகர்வால்) பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

பிடிவாத குணம் கொண்ட குழந்தையை நல்வழிப்படுத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு டீச்சர் அவருக்கு பாடம் ஒப்புக்கொள்கிறார். வக்கீல் பிரியா தொழில் பிஸியாக இருப்பதால் மகளை சரிவர கவனிக்க முடியவில்லை. இதற்கிடையில் சிறுமி நிக்கி மனதில், அவளின் இறந்து போன பாட்டி, அவ்வப்போது ஆவியாக வந்து நிக்கியுடன் உரையாடுகிறார்.

இதனை பார்த்து பயந்துப்போன சோனியா அகர்வால் வேலையை விட்டுவிடுகிறார். அந்த கிராண்மாவின் ஆவி சோனியா அகர்வாலை சந்தித்து என்ன சொல்கிறது? வக்கீல் பிரியாவிற்கு அடுத்தடுத்து என்ன பிரச்சினைகள் வரப்போகிறது? ஏன் அந்த கிராண்மா தொடர்சியாக வருகிறார்? என்பதே படத்தின் மீதி கதை.

விறுவிறுப்பாக அமைந்திருக்கும் இதன் திரைக்கதை படத்தின் நீரோட்டத்தில் ரசிகர்களை பயணிக்க வைக்கிறது. கதை தேர்வும் கதாப்பாத்திரத்தின் தேர்வும் சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் சிஜின்லால் எஸ்.எஸ். இப்படத்தின் கிளைமேக்ஸ் யாருமே எதிர்பார்க்காத அளவில் அமைந்திருப்பது சிறப்பாக உள்ளது.

இருந்து படம் சில இடங்களில் சற்று தொய்வு ஏற்படும் படி அமைந்திருக்கிறது. டீச்சராக நடித்திருக்கும் சோனியா அகர்வால் அவரின் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் விறுவிறுப்பிற்கு உதவி இருக்கிறார். விமலா ராமனின் எதார்த்த நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. மகள் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பௌர்ணமி ராஜ்ஜின் நடிப்பு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

வில்லனாக நடித்திருக்கும் ஹேமந்த் மேனன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திரில்லர் படங்களுக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார் யஸ்வந்த் பாலாஜி. படத்தின் காட்சிகள் மூலம் படத்தின் கதையை வெளிப்படுத்தியுள்ளார்.

சங்கர் ஷர்மாவின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவி இருக்கிறது.

மொத்ததில் ‘கிராண்மா’ சுறுசுறுப்பு.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!