AK 61 இப்படிப்பட்ட கதையா? ஹெச்.வினோத்தின் மாஸ்டர் பிளான்! கசிந்த முக்கிய தகவல்

அஜித் தற்போது முன்றாவது முறையாக ஹெச் வினோத் உடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஏகே61 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக ஹைதராபாத்தில் அதிக செலவில் செட் அமைக்கப்பட்ட ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தின் கதை பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.


கதையான உண்மை சம்பவம்?
ஏகே61 கதையை ஹெச்.வினோத் உண்மை சம்பவங்களில் அடிப்படையில் தான் எழுதி இருக்கிறாராம். வங்கி கொள்ளை மையப்படுத்திய கதை என்றும் உண்மையாக நடந்த சம்பவங்களை வைத்து தான் இயக்குனர் அனைத்தையும் வடிவமைத்து இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இருப்பினும் இதை ஹெச்.வினோத் அதிகாரபூர்வமாக உறுதி செய்யவில்லை. இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு ஏகே61 படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஷூட்டிங் அதற்கு முன்பே ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும் என தெரிகிறது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!