விஜய்யா ரஜினியா.. வெளிநாட்டு வசூலில் யார் கிங்? டாப் 15 படங்கள் லிஸ்ட்

பொதுவாக நடிகர்களின் மாஸ் அவர்களின் படங்கள் செய்யும் வசூலை வைத்து தான் முடிவாகிறது.

அதனால் தொடர்ந்து கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் இடையே இந்த வசூல் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற நடிகர்களும் தற்போது 100 கோடி கிளப்பில் வர தொடங்கிவிட்டார்கள்.

படங்களின் வசூலில் பெரும் பங்கு வெளிநாட்டு வசூலும் வகிக்கிறது. வெளிநாடுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் படங்கள் வழக்கமாக ரிலீஸ் ஆகி வருகின்றன. அப்படி வெளிநாட்டு வசூலில் அதிகம் முன்னணியில் இருப்பது ரஜினி தான்.

வெளிநாட்டு வசூலில் டாப் 15 தமிழ் படங்கள் எடுத்துக்கொண்டால் அதில் 9 ரஜினிகாந்த் படங்கள் தான். விஜய் படங்கள் 4 மட்டுமே. அஜித் மற்றும் விக்ரம் படங்கள் தலா ஒன்று டாப் 15 லிஸ்டில் இருக்கின்றன.

வெளிநாட்டு வசூலில் டாப் 15 படங்கள் லிஸ்ட் இதோ
1. 2.0 (25 மில்லியன் $)
2. கபாலி (16 மில்லியன் $)
3.எந்திரன் (15 மில்லியன் $)
4. பிகில் (11.5 மில்லியன் $)
5. தர்பார் (11.3 மில்லியன் $)
6. மெர்சல் (11 மில்லியன் $)
7.பேட்ட (10.2 மில்லியன் $)
8.சர்க்கார் (9.8 மில்லியன் $)
9.ஐ (9.4 மில்லியன் $)
10. சிவாஜி (8.5 மில்லியன் $)
11.பீஸ்ட் (7.8 மில்லியன் $)
12. காலா (6.7 மில்லியன் $)
13.அண்ணாத்த (6.2 மில்லியன் $)
14.லிங்கா (5.6 மில்லியன் $)
15. வலிமை (5.5 மில்லியன்) 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!