
விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் வெறும் 10 நிமிடம் மட்டுமே தான் வரும் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வளவு சின்ன ரோலில் நடிக்க முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா எப்படி ஒப்புக்கொண்டார். அதற்கு காரணம் என்ன என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.
சூர்யா இதற்கு முன்பே மன்மதன் அம்பு படத்தில் ஒரு கெஸ்ட் ரோல் நடித்து இருப்பார். தற்போது இரண்டாம் முறையாக கமல் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார். சூர்யா கமல்ஹாசனை தனது குருவாக நினைப்பதால் அவர் கேட்டுக்கொண்டால் மறுப்பு சொல்லாமல் சூர்யா நடித்து கொடுக்கிறாராம்.
- இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!