ஒரே ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மூன்று படங்கள் ரிலீஸ்.. அதிரடி காட்டும் நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தியின் படங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

இதில், மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவே ஆவலுடன் பார்க்க காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

இதனை தொடர்ந்து கிராமத்து கதைக்களத்தில் முத்தையா இயக்கி, உருவாகியுள்ள விருமன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

மேலும், மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார்த்தியின் மூன்று திரைப்படங்களும், ஒரே ஆண்டில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!