படப்பிடிப்பை தொடங்கும் ரஜினி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். ஆனாலும் பட வேலைகளை இன்னும் தொடங்கவில்லை. இது ரஜினிக்கு 169-வது படம். இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராயும், வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், மகள் கதாபாத்திரத்தில் பிரியங்கா அருள் மோகனும் நடிப்பதாக தகவல் பரவியது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்குவற்கு முன்பு ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சில வாரங்கள் தங்கி இருந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும், அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பியதும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர் என்றும் தகவல் வெளியானது. ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் முன்னதாக ஜூலை மாதமே படப்பிடிப்பை தொடங்க ஏற்பாடுகள் நடப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவருகிறார்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!