பிரபல சின்னத்திரை நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்!

பிரபல ஹிந்தி சின்னத்திரை நடிகை மஞ்சு சிங் இன்று மாரடைப்பு காரணமாக மரணடைந்தார். அவர் கோல்மால் உள்ளிட்ட எக்கச்சக்க ஷோக்களில் நடித்து இருக்கிறார்.

மஞ்சு சிங்
1980களில் டிவி அதிகம் பாப்புலர் ஆக தொடங்கிய காலத்தில் மஞ்சு சிங் உருவாக்கிய நிகழ்ச்சிகள் ரசிகர்களை அதிகம் ஈர்த்தவை. அவரது ‘ஷோ தீம்’ என்ற நிகழ்ச்சி தான் சின்னத்திரையில் முதல் sponsored programme ஆகும்.

சீரியல்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், ஆன்மிகம் முதல் சமூக பிரச்சனைகள் வரை பல பிரபல நிகழ்ச்சிகளை அவர் உருவாக்கி இருக்கிறார். அவை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி இருக்கின்றன.

அது மட்டுமின்றி மஞ்சு சிங் ஹிந்தி திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்து இருக்கிறார்.


மரணம்
மஞ்சு சிங் மாரடைப்பால் இன்று காலமானதாக செய்தி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

“With profound grief, we inform you about the demise of our Manju Singh. She lived a beautiful and inspiring life, devoted to her family and her craft. From ‘Manju Didi’ to ‘Manju Nani’ she will be truly missed by all” என அவரது குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

மஞ்சு சிங் மறைவுக்கு சின்னத்திரை மற்றும் சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!