வலிமை திரைப்படம் இத்தனை சதவீதம் நஷ்டம்?- தயாரிப்பாளர் ஏற்படுத்திய சர்ச்சை

அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கிய இரண்டாவது திரைப்படம்.

வலிமை செய்த வசூல் விவரம்
அஜித்தின் வலிமை தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது, அடுத்தடுத்த வாரங்கள் என 3வது வாரம் கூட படத்தின் புக்கிங் பெரிய அளவில் இருந்தது.

இப்பட தயாரிப்பாளர் போனி கபூரே அண்மையில் படம் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். ஆனால் படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி தான், வசூல் அதிகம் வர படம் லாபமான படம் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

நஷ்டம் என்ற தயாரிப்பாளர்
இப்படி வசூல் விவரம் கேட்டு ரசிகர்கள் கொண்டாட இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் ராஜன் படம் சென்னை, செங்கல்பட்டு இடங்களில் 10% நஷ்டம் என்றும் மற்ற இடங்களில் 20% நஷ்டம் என்று கூறியுள்ளார்.

ஆனால் விநியோகஸ்தர்களோ படம் லாபம் தான் நஷ்டம் என்றால் நாங்கள் கூற போகிறோம் என்கின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!