மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து டாப் நடிகை.. இது சூப்பர்ஹிட் ஜோடி ஆச்சே

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், ஜனகனமன, அகிலன் ஆகிய மூன்று படங்கள் தயாராகி வருகிறது.

இதில், பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

மேலும், ஜனகனமன மற்றும் அகிலன் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக அஹ்மத் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை Passion Studios தயாரிக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் டாப் நடிகை நயன்தாரவுடன் இணைந்து ஜெயம் ரவி நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இணைந்து நடித்து வெளிவந்த தனி ஒருவன் திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!