ரசிகர்களுக்கு முன் உதாரணமாக மாறிய சிம்பு

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் சிம்பு அவருடைய ரசிகர்களுக்கு முன் உதாரணமாக மாறியிருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி பிறகு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ’உறவு காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் தொடர்சியாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து காதல் அழிவதில்லை, தம், அலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார்.

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களில் கைதேர்ந்தவர் சிம்பு. இருப்பினும் சிம்புவின் மீது பல விமரசனங்கள் வைக்கப்பட்டு வந்தது. படங்களில் சற்று கவனம் செலுத்த தவறிய சிம்பு திடீரென அவரின் உடல் எடை அதிகரித்தது. 2019-இல் வெளியான ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் வெளியான போது சுமார் 105 கிலோ எடையுடன் பருமனான கதாநாயகனாக திரையில் தோன்றினார். இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உடல் எடைக்காக நடிகர் சிம்பு அதிக விமர்சனத்திற்கு ஆளானார். 

இதையடுத்து உடல் எடையை குறைப்பதற்காக தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சிம்பு, அதனை சாதித்தும் காட்டினார். கடந்த ஆண்டு வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தில் வெகுவாக உடல் எடையை குறைத்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில் அவருடைய பிறந்தநாளான நேற்று (பிப்ரவி 04) அன்று நடிகர் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 105 கிலோவில் இருந்து 70 கிலோ வரையிலான தனது உடல் எடைக்குறைப்பின் ரகசியத்தை அந்த வீடியோ பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். அவரது எடைக்குறைப்புக்கு பின்னால் இருக்கும் கடின உழைப்பு பற்றிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!