அருவி பட இயக்குனருக்கு திருமணம் – குவியும் வாழ்த்துக்கள்!

அருவி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண் பிரபு புருஷோத்தமனுக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

2017-ஆம் ஆண்டு நடிகை அதிதி பாலன் நடித்து வெளியான திரைப்படம் ’அருவி’. இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண் பிரபு புருஷோத்தமன். இந்த படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சிவகார்த்திகேயன் தயாரித்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான வாழ் திரைப்படமும் வெற்றிப்பெற்றது.


இந்நிலையில் நேற்று இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், டீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து மணமக்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த புதுமணத்தம்பதிக்கு ஆர்.டி.ராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 


இவர் தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி ஹீரோவை வைத்து மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!