அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை..? அட, இவரா

அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகியுள்ளது. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

இம்மாதம் வெளியாவதாக இருந்த இப்படம், கொரோனா தாக்கம் காரணமாக தள்ளிப்போய் உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் 61வது படத்தின் முதற்கட்ட வேலைகள் தற்போது துவங்கியுள்ளதாம். இப்படத்தை எச். வினோத் தான் இயக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, பாலிவுட் கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

மேலும், நடிகை பூஜா ஹெக்டேவிடமும் அஜித்61 படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டே தற்போது விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!