நடிகர் விஜய் இதுநாள் வரை மற்ற மொழிகளில் நடிக்காததற்கு இதுதான் காரணமா?

நடிகர் விஜய் தமிழ் சினிமா தலையில் வைத்து கொண்டாடும் ஒரு மிகப்பெரிய நடிகர். ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தன்னிடம் அவர்கள் என்ன எதிர்ப்பார்க்கிறார்களோ அதை படத்தில் கண்டிப்பாக வைத்திருப்பார்.

இப்போது அவர் இளம் இயக்குனர் நெல்சனின் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஃபஸ்ட் லுக் எல்லாம் எப்போதோ ரிலீஸ் ஆகிவிட்டது, வரும் பொங்கலுக்கு படம் குறித்து ஏதாவது ஸ்பெஷல் தகவல் வருமா என்கிற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளார்கள்.

படப்பிடிப்பும் ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் பாடல்கள் குறித்து தகவல் அரிய வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

தமிழில் விஜய் நடித்த படங்கள் பல மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது, ஆனால் இதுவரை மற்ற மொழிகளில் விஜய் நடித்ததே இல்லை.

காரணம் இங்கு இருக்கும் மரியாதை மற்ற மொழிகளில் இல்லை எனவும் எப்போதும் டபுள் ஹீரோ கதைகள் தான் அதிகம் என்பதால் விஜய் மற்ற மொழிகளில் நடிப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!