வாய்ப்புகாக தவறாக அழைத்த இயக்குனர்கள்.. உண்மையை உடைத்து கூறிய யாஷிகா

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.இதன்பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து பிரபலமானார்.

இதன்பின், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தாலும், பெரிதளவில் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு யாஷிகா சென்ற கார் விபத்திற்குள்ளாகி, யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பேரஷன் எல்லாம் முடிந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்துவிட்டார். மேலும் தற்போது படங்களிலும் நடிக்க துவங்கிவிட்டதாக அவரே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில், வாய்ப்பு தேடும் பொழுது, பல இயக்குனர்கள் தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார்களாம்.
இன்னும் சில இயக்குனர்கள் தவறான காட்சிகளை நடித்து காட்டுமாறு கேட்டார்களாம். ஆனால், நான் அதெயெல்லாம் ஒப்புக்கொள்ளாமல் அங்கிருந்து உடனடியாக கிளம்பிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார் யாஷிகா ஆனந்த்.  
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!