இயக்குனர் பாலாஜி சக்திவேல் வீட்டில் நடந்த சோகம்

காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி சக்திவேல் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலாஜி சக்திவேல். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்தது. அதன்பின் கல்லூரி, வழக்கு எண் 18/9 என அடுத்தடுத்து சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் அசுரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் இன்று உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. சென்னை ராமாபுரத்தில் உள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேலின் இல்லத்தில் சக்தி வடிவேலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!