மீண்டும் விஜய் பக்கம் வந்த அட்லீ, ரசிகர்கள் குழப்பமான மனநிலை

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் முடிந்து அடுத்து விஜய் வம்சி இயக்கத்தில் நடிக்கிறார், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகவுள்ளது.

இந்நிலையில் இதை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லீயுடன் கைக்கோர்க்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அட்லீ இயக்கத்தில் விஜய் ஏற்கனவே 3 படங்கள் நடித்துவிட்டர், ஒரு தரப்பு ரசிகர்கள் கொண்டாடினாலும், சில ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

ஏனென்றால் அட்லீயின் கடைசி படமான பிகில் விஜய் ரசிகர்கள் சிலரையும் சோதித்தது, அதன் காரணமாகவே தான் அஞ்சுகின்றனர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!