ராம் சரண்-ஷங்கர் இணையும் படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி எல்லோரையும் வியக்க வைத்தவர்.

ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய படங்கள் அனைத்தும் செம ஹிட், புதிய தொழில்நுட்ப விஷயங்களை படத்தில் காட்டி மக்களை அசத்தியிருப்பார். கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படம் இயக்கி வருகிறார்.

அப்படத்தை தொடர்ந்து தமிழ் நடிகருடன் இணைவார் என்று பார்த்தால் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்குவதாக செய்தி அறிவித்தார்.

படத்திற்கான பூஜை எல்லாம் மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டது, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் எல்லாம் வந்திருந்தார்.

தற்போது படம் குறித்து என்ன தகவல் என்றால் பட பட்ஜெட் மட்டும் ரூ. 350 கோடி என கூறப்படுகிறது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!