விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி கேங்கில் நடிக்கும் நடிகர்கள்! யாரெல்லாம் தெரியுமா?

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.

அனைவரிடமும் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விக்ரம் படத்தின் First Glance வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

மேலும் விக்ரம் திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ள விஜய் சேதுபதியின் கேங்கில் நடித்துள்ள நடிகர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி விஜய் சேதுபதி கேங்கில் மலையாள நடிகர் செம்பன் வினோத், சம்பத் ராம், டில்லி கணேஷின் மகன் மஹாதேவன், மானாட மயிலாட கோகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!