ராஜமௌலியுடன் இணையும் மகேஷ் பாபு.. அவரே கூறிய தகவல்

பாகுபலி-2 படத்தை அடுத்து ஜூனியர் என்டிஆர்-ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியுள்ளார் ராஜமவுலி.

இப்படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. வருகிற ஜனவரி 7ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இப்படதிற்கு பின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராஜமவுலி. அப்படம் குறித்து மகேஷ்பாபு அளித்த ஒரு பேட்டியில், ராஜ மவுலி இயக்கத்தில் நான் நடிக்கும் படம் இந்திய படமாக உருவாகிறது.

அனைத்து இந்திய மொழிகளிலும் பிரமாண்டாக தயாரிக்கப்பட உள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

இப்படம் குறித்த அறிவிப்பை விரைவில் ராஜமவுலி அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!