நடிகர் விஜய்யை தவறாக பேசிய மருத்துவர்.. ஆதரவாக முன்னாள் நீதிபதியின் கருத்து

இங்கிலாந்து நாட்டில் இருந்து நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த தகவல் தான் சில தினங்களாக சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இதுமட்மின்றி ” சினிமாவில் ரீல் ஹீரோவாக இருந்தால் மட்டும் போதாது, ரியல் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்றும், வரி கட்டுவது ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பு என்றும், வரி கட்டுவதை நன்கொடை கொடுப்பது போல் கருதக்கூடாது ” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இதுபோக, மெர்சல் படத்தில் விஜய் 5 ரூபாய் டாக்டராக நடித்து இருந்ததை கேலி செய்தும், நடிகர் விஜய்யை தவறாக பேசியும் பதிவு ஒன்றை. மருத்துவர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் பேட்டி ஒன்றில் கூறிய போது ” இந்திய அரசியல் சட்டத்தில் யார் வேண்டுமானாலும் வரிவிலக்கு கேட்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. வரிவிலக்கு கொடுத்தால் வாங்கி கொள்வார்கள். கொடுக்கவில்லை என்றால் வரி கட்டி விடுவார்கள். இதற்காக ரியல் ஹீரோ, ரீல் ஹீரோ என்ற கருத்து தேவையில்லாதா பேச்சு ” என்று கூறியுள்ளார்.

இவரின் ஆதரவான கருத்து, அணைத்து விமர்சனங்களுக்கும், தவறாக பேசி வரும் சிலருக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/-hPTdN_RHo8″ frameborder=”0″ allowfullscreen>

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!