ஷாருக் கான் – அட்லீ படத்தின் கதை இது தானா! இப்போதுதே கிண்டலடிக்க ஆரம்பித்த நெட்டிசன்கள்

இயக்குனர்அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர், இவரின் இயக்கத்தில் வெளியான 4 படங்களுமே பிளாக் பஸ்டர் தான்.

அட்லீ அடுத்ததாக பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஷாருக் கான் இந்திய உளவுத்துறை அதிகாரியாகவும், விதிகளை மீறும் நபராகவும் என டபுள் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இவர்களுக்குள் நடக்கும் மோதலே இப்படத்தின் கதை எனவும் கூறப்படுகிறது. இதனையறிந்த நெட்டிசன்கள் தற்போது அட்லீ அங்கு சென்று விஜயகாந்தின் பேரரசு படத்தை இயக்கவுள்ளார் என மீம்ஸ்களை போட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!