வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?

ஷங்கரின் இந்தியன் 2, லோகேஷ் கனகராஜின் விக்ரம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள கமல், அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் வெற்றிமாறன். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து தயாராகி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையடுத்து சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், விரைவில் கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல் – வெற்றிமாறன் இணைய உள்ள படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!