இது விபத்து பகுதி – விமர்சனம்

நடிகர் சசி
நடிகை அனு
இயக்குனர் விஜய் திருமூலம்
இசை சாய் தர்ஷன்
ஓளிப்பதிவு விஜய் திருமூலம்
மூன்று ஆண்கள், ஒரு பெண் ஆகிய நான்கு பேரும் ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஜாலியாக கதைகளை பேசுகிறார்கள். ஒவ்வொரு கதைகளிலும் ஒருவர் இறக்கிறார். கதைகளில் இறந்தவர்கள் யார்? எப்படி இறந்தார்கள்? இறந்தவர்களுக்கு கதை சொல்லும் நான்கு பேருக்கு என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆந்தாலஜி பாணியில் நான்கு கதைகளை உருவாக்கி இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் திருமூலம். நான்கு கதைகள், நான்கு கதைகளில் சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லி இருக்கலாம். பல காட்சிகள் வேண்டுமென்றே திணித்தது போல் இருந்தது. இவரே ஒளிப்பதிவையும் செய்து இருக்கிறார்.

கதாப்பாத்திரங்கள் இடையே இன்னும் அதிகமாக வேலை வாங்கியிருக்கலாம். விபத்து ஏற்படுவதும், அதற்கான காட்சியமைப்பையும் விறுவிறுப்பாக இல்லை.

தென்னவன், சசி, அனு கிருஷ்ணா, டிட்டோ ஷார்மின் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஆதிஷ் உத்ரியன், சாய்தர்ஷன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் ‘இது விபத்து பகுதி’ தடுமாற்றம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!