காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, காதல் திருமணம் தான் செய்வேன் என கூறியுள்ளார்.

நடிகை திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது. பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், திருமணம் பற்றி திரிஷா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!