குளிர்பான விளம்பரத்தில் நடித்தது குறித்து தளபதி விஜய்யிடம் அன்றே எழுப்பப்பட்ட கேள்வி, அவர் அளித்த அதிரடியான பதில்..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவருக்கு தமிழகம் எங்கும் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவரின் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.

இப்படமும் லாக்டவுன் முடிந்த பிறகு வெளியாகும் என கூறபடுகிறது. மேலும் இவரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் பிரபல குளிர்பானத்தில் விளம்பர படத்தில் நடித்திருந்தார், ஆனால் குளிர்பானத்திற்கு எதிராக பேசும் படமான கத்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இது குறித்து தளபதி விஜய் ரசிகர்களுடன் ட்விட்டரில் நடத்திய உரையாடலில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகர் விஜய் “இப்பொது நான் அப்படி நடித்ததில் சந்தோஷமாக உள்ளது.

என்னோட தவறுகளை திருத்தி கொள்கிற சாதரணமான மனிதன் தான் நானும்” என பதிலளித்துள்ளார்.

மேலும் இந்த உரையாடல் கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பதிவு ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!