திருமணத்திற்காக தன்னை தயார் படுத்திகொள்ளும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. முழு விவரம் இதோ..

தமிழ் திரையுலகில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதன்பின் தனுஷ், விஜய், சூர்யா, விக்ரம், தற்போது அண்ணாத்த படத் சூப்பர் ஸ்டார் ரஜினி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.

மேலும் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் கூடிய விரைவில் படத்தில் ஜோடியாக இணைந்து நடிக்கவுள்ளார் கீர்த்தி.

மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்க போவதாக கூறப்பட்டு வரும் வேட்டையாடு விளையாடு படத்தில் கூட கீர்த்தி தான் கதாநாயகி என பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கலாம்.

சமீப காலமாக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் இதனை குறித்து தற்போது வெளிவந்துள்ள தகவலில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தற்போதைய நிலையில் திருமணம் செய்ய யோசனை கிடையாதாம். தனது முழு கவனத்தையும் சினிமா மேல் தான் வைத்துள்ளாராம்.

ஆனால் தனது திருமணத்திற்காக இப்போதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தயார் ஆகி வருகிறாராம் கீர்த்தி சுரேஷ் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!