பிக் பாஸ் மீரா மிதுனுக்கு விரைவில் திருமணம்! அவரே கூறிய உண்மை தகவல் இதோ..

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3-ல், கலந்து கொண்டவர்களில் மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலமாக திகழ்ந்தவர் நடிகை மீரா மிதுன்.

நடிகை மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிய வந்தபின்னும் பல சர்ச்சையில் சிக்கி கொண்டார். மேலும் சர்ச்சைக்குரிய விதமாக ட்வீட்களையும் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் உள்ள ஒரு வீடியோவை பதிவிட்டு “இது உண்மை, இதையும் கோப்பி செய்ய வேண்டாம்” என கேப்ஷன் போட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் விரைவில் திருமணத்திற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!