ஹீரோக்கள் தான் அதிக சம்பளம் வாங்கனுமா? நாங்க வாங்கக் கூடாதா? – தமன்னா கறார்

ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாக செய்திகள் பரவின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமன்னா, என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை. ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது.

எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை.

நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும் படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஹீரோக்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா? இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!