டிவி சீரியல்களின் நிலைமை! அடுத்து என்ன நடக்கப்போகிறது! ராதிகா சொல்லும் உண்மை

கொரோனாவால் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன. சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் நின்றுவிட்டன.

தற்போது டிவி சானல்கள் அனைத்தும் இந்த கொரோனாவால் புதிய எபிசோடுகள் தட்டுப்பாட்டால் பழைய சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பு வருகின்றன.

ஊரடங்கு மே 3 ம் தேதி வரை தொடர்கிறது. இதனால் மே 11 முதல் சீரியல்கள் ஒளிபரப்பாகும் என தொலைக்காட்சி வட்டாரத்தில் சொல்லப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் சீரியல்களில் முக்கிய நபராக இருக்கும் ராதிகாவும், குஷ்பூவும் விளக்கம் அளித்துள்ளனர்.

இதில் குஷ்பூ, பெஃப்சி தலைவரிடமும், சுகாதாரத்துறை அமைச்சரிடமும் பேசியதாகவும், அதிக அளவிலான பரிசோதனைகள் நடைபெற்று வருவதால் ஏப்ரல் 27 ம் தேதிக்கு பின்னரே படப்பிடிப்புகள் பற்றி பேசமுடியுமென கூறிவிட்டார்களாம். அதோடு வெளி இடங்களுக்கு செல்லாமல், முக்கிய நபர்களை கொண்டு ஒரே நாளில் அதிகபட்ச எபிசோடுகளை படமாக்குங்கள் என சொல்லியதாக குஷ்பூ கூறியுள்ளார்.

அதே போல் நடிகை ராதிகா மே 5 ம் தேதிக்கு பின் படப்பிடிப்புகள் செய்யலாம் என கூறப்படவில்லை, கதையை தயார் செய்து ஷூட்டிங்குக்கு தயாராக இருக்கும் படி கூறியுள்ளேன். கோடம்பாக்கம் ஹாட் ஸ்பாட்டில் இருக்கிறது. சென்னையில் அதிக பாதிப்பு. ஷூட்டிங் பற்றி இப்போது பேச முடியாது. ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் படப்பிடிப்பு பற்றி யோசிக்க முடியாது. இந்த சூழ்நிலையை பற்றி எப்படி திட்டமிட்டு பணியாற்றப்போகிறோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!