கொரோனாவால் சினிமாவில் இத்தனை கோடி நஷ்டமாம்! யாரும் எதிர்பார்க்காதது

கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகையே உலுக்கிவிட்டது. பொருளாதாரம் பெரிதளவில் முடங்கிவிட்டன. வளர்ந்த நாடுகளே எப்படி இதை சமாளிப்பதென்று தெரியாமல் தத்தளித்து போயுள்ளன. சீனாவில் தொடங்கிய அந்த கொடிய வைரஸ் உலகம் முழுக்க பரவிவிட்டது.

சினிமாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்புகள் ரத்து என முற்றிலும் முடங்கிவிட்டது. இம்மாதத்தில் வெளியாக இருந்த படங்கள் தேதி குறிப்பிட முடியாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

விஜய் நடிப்பில் மாஸ்டர், சூர்யா நடிப்பில் சூரரை போற்று, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், ஜெயம் ரவி நடித்திருக்கும் பூமி, நயன்தாரா நடித்திருக்கும் மூக்குத்தி அம்மன் என பல படங்கள் கொரோனாவால் வெளிவரமுடியாமல் சிக்கியுள்ளன.

அதே போல ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை, பிளாக் வின்டோ, ஒண்டர் உமன் ஆகிய படங்களின் ரிலீஸ் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் உலகளவில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி திரையுலகத்திற்கு நஷ்டம் என சினிமா வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படம் வெளியான பின்னும் வசூல் 30 சதவீதம் பாதிக்கும் நிலை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் திரைத்துறையில் மிகுந்த நெருக்கடி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!