அஜித்தால் மீண்டு எழுந்த தயாரிப்பு நிறுவனமும், நானும்- பிரபல இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர் அஜித். இவருடைய படத்திற்கும் கிடைக்கும் வரவேற்பு என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித் திரைப்பயணத்தில் மிகமுக்கியமான படம் என்றால் அமர்க்களம், இது தான் இவரின் 25வது படம்.

இப்படத்தின் மூலம் தான் அஜித் முதன்முறையாக ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார், இந்நிலையில் அஜித் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லையாம்.

ஏனெனில் இதே தயாரிப்பாளருக்கு அதற்கு முந்தைய படம் தோல்வி என்பதால், இந்த படத்திற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.

இதன் காரணமாகவே அந்த தயாரிப்பு நிறுவனம் மீண்டு வந்தது, நானும் மீண்டு வந்தேன் என அப்படத்தின் இயக்குனர் சரண் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!