பொண்டாட்டி, மகள்களுக்கு முன்னாடி நடிக்கிற சீனா இது?: பாவம்யா சுந்தர் சி.

பொண்டாட்டி, பிள்ளைங்கள வச்சுக்கிட்டு இருட்டு பட செட்டில் சுந்தர் சி. ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார்.

துரை இயக்கத்தில் சுந்தர் சி. ஹீரோவாக நடித்துள்ள இருட்டு படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. அவருக்கு ஜோடியாக புதுமுகம் சாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். ட்ரெய்லரில் சுந்த சி. லிப் டூ லிப் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் படம் குறித்து சுந்தர் சி. கூறியிருப்பதாவது,

ஹீரோயினுடன் நெருக்கமான காட்சி வைத்தே ஆக வேண்டும் என்று இயக்குநர் கூறினார். கண்டிப்பாக வேண்டுமா, இந்த காட்சியை தவிர்க்கலாமே என்று நான் கூறினேன்.

அந்த காட்சியை ஊட்டியில் படமாக்கினார்கள். முத்தக் காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது என் மனைவி குஷ்பு, மகள் வேறு செட்டில் இருந்தார்கள். என் நிலைமை யோசித்துப் பாருங்கள்.

முத்தக் காட்சிகளுக்கு பல டேக்குகள் போனது. அது நான் வேண்டும் என்றே செய்யவில்லை. இயக்குநர் நினைத்தபடி வரவில்லை என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து குஷ்பு ஷூட்டிங் நடந்த அறையில் இருந்து வெளியே சென்றுவிட்டார் என்றார்.

படம் பற்றி இயக்குநர் துரை கூறியதாவது,

இருட்டு பிற ஹாரர் படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும். இதில் இஸ்லாமிய பேய்களான ஜின்களை காட்டியுள்ளோம். ஜின் குறித்து ஆய்வு செய்து அறிமுகப்படுத்தியுள்ளோம். தமிழ் சினிமாவுக்கு இது புதுசு. ஜின்கள் இருப்பதாக இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்.

விடிவி கணேஷ் தான் சுந்தரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்றார்.

இருட்டு படத்தில் சாய் தன்ஷிகா, யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!