எங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்: கவினை விடாது துரத்தும் ரசிகர்கள்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு பிறகு கவினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். கவின் கோலிவுட்டில் பெரிய ஹீரோவாக வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். கவின் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆமாம், கவின் புகைப்படம் வெளியிடுவது எல்லாம் ஒரு விஷயமா என்று நினைத்தால் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பாருங்கள்.

கவின் புகைப்படம்
கவின் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் லட்சக்கணக்கில் லைக்ஸ் வருகிறது. ஒரு பனியன் போட்ட புகைப்படத்திற்கே லட்சத்திற்கு மேல் லைக்ஸ் கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்நிலையில் கவின் தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். எல்லா போட்டோவும் தீர்ந்து போச்சு, இது தான் கடைசி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோஸ்லியா எங்கே?
இன்ஸ்டாகிராமில் கவினின் புகைப்படத்தை பார்த்த அவரின் தீவிர ரசிகர்கள்(தீவிர ரசிகர்கள், நீ பார்த்த என்று கேட்க வேண்டாம், நிஜமாவே இருக்காங்க பாஸ்), ப்ரோ லோஸ்லியா எங்கே?. பிரிந்துவிட்டீர்களா, ஏதாவது பிரச்சனையா?. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏன் லோஸ்லியாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிடவில்லை? என்று கேட்டுள்ளனர்.

காதல் முறிந்துவிட்டதா?
நீங்களும், லோஸ்லியாவும் திருமணம் செய்து கொள்வீர்கள் என்று அல்லவா நாங்கள் எதிர்பார்த்தோம். நடப்பதை பார்த்தால் உங்கள் இருவருக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டதோ என்கிற சந்தேகம் எழுகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தர்ஷன் தனது காதலியான நடிகை சனம் ஷெட்டியை பிரிந்துவிட்டார். அது போன்று நீங்களும் லோஸ்லியாவை பிரிந்துவிட்டீர்களா கவின் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். லோஸ்லியாவை பிரிந்துவிட்டீர்களா என்று தான் பலரும் கேட்டுள்ளனர்.

லோஸ்லியாவும் தனியாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!