‘பாடல்கள் இல்லை என்பது வரவேற்கத்தக்க மாற்றம்’: கைதி படத்தை புகழ்ந்து தள்ளிய மகேஷ் பாபு

கைதி படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

கோலிவுட்டில் படம் என்றாலே ஹீரோ, ஹீரோயின், பாட்டு, காதல், ரொமான்ஸ், காமெடி போன்ற ஃபார்முலா அப்லை செய்து தான் படத்தை இயக்குநர்கள் எடுத்து வருகின்றனர்.

ஆனால் சினிமா என்றால் , அது மட்டும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் தான் கைதி. ஹீரோயின், பாட்டு, ரொமான்ஸ், காமெடி போன்றவை இல்லாமல் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மிக கச்சிதமாக தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் லோகேஷ்.

தீபாவளியை முன்னிட்டு பிகில் படத்துடன் வெளியான கைதி படத்திற்கு முதலில் குறைவான திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கொடுத்த பாசிட்டிவான கருத்துகள் மூலம் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைதி படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, ‘கைதி.. புது வயது திரைப்படம்..

விறு விறுப்பான ஸ்க்ரிப்டில் த்ரில்லிங் ஆக்ஷன்ஸ் காட்சிகள். பாடல்கள் இல்லை என்பது வரவேற்கத்தக்க மாற்றம்.. மொத்த படக்குழுவுக்கும் எனது பாராட்டு’ என்று தெரிவித்துள்ளார். மகேஷ்பாபு ட்வீட்டைகண்ட ‘கைதி’ பட தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.

மகேஷ்பாபு ட்விட்டை கண்ட கார்த்தி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!