பிக் பாஸ் முகினின் தங்கையுடன் அபிராமி செய்யும் அட்ராஸிட்டியை பாருங்களேன்: வைரல் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, முகினின் தங்கையுடன் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 79வது நாளை தொட்டுள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் (Freeze) டாஸ்க் நடைபெறுகிறது. இது ஏற்கனவே கடந்த சீசன்களிலும் நடைபெற்றது.இதில் போட்டியாளர்களின் குடும்பத்திலிருந்து அழைத்து வருவார்கள். அவர்கள் வருவதற்கு முன்னரே போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வேண்டும் என்ற கண்டிஷன் போடப்படும்.
https://www.instagram.com/p/B2PLyBCFTa4/

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளரான முகினின் குடும்பத்தார் இந்த டாஸ்கில் கலந்துகொண்டனர்.அப்போது முகின் அவரது அம்மாவை பார்த்துக் கதறி அழுகிறார். மேலும் அவரின் தங்கையும் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார்.
https://www.instagram.com/p/B2LyqgVlSiM/

இந்நிலையில் பிக் பாஸ் போட்டிக்காக சென்னை வந்துள்ள அவர்களை முன்னதாக பிக் பாஸ் மற்றொரு போட்டியாளரும் முகினை ஒருதலையாக தீவிரமாக காதலித்து வரும் அபிராமி சந்தித்துள்ளார்.

அப்போது முகினின் தங்கையுடன் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.