‘லிப்கிஸ்’ மிஸ் ஆனதால் ஏமாற்றம் அடைந்த பிரியா வாரியர்- வைரலான வீடியோ

மலையாள நடிகை பிரியா வாரியர் நடித்த ‘ஒரு ஆதார் லவ்’ என்ற படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானபோது அதில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு கண்ணசைவு காட்சி நாடு முழுவதும் வைரலானது. இதனையடுத்து சில நாட்கள் பிரியாவாரியர் நாட்டின் முன்னணி ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றார்.

இந்த நிலையில் தற்போது பிரியாவாரியர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரும் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த்தும் அருகருகே உட்கார்ந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் சினு சித்தார்த் பிரியாவாரியரின் உதட்டில் முத்தம் கொடுப்பதுபோல் வந்து பின்னர் திடீரென தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை குடிக்கின்றார். இதனால் பிரியாவாரியர் ஏமாற்றம் அடைவது போல் அந்த வீடியோ முடிந்துள்ளது. இந்த வீடியோவில் பிரியாவாரியர், ‘Tb to this “ithenthinte kunjade?’ என்ற கமெண்ட்டையும் பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/p/B0C_FbJAY3m/?utm_source=ig_embed

பிரியாவாரியர் நடித்த ‘ஒரு ஆதார் லவ்’ மற்றும் அவர் தற்போது நடித்து வரும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக சினு சித்தார்த் பணிபுரிந்தவர் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.