இன்னொரு தடவ…விஜய் சேதுபதி-ரம்யா கிருஷ்ணன் மிரட்டும் சூப்பர் டீலக்சின் புரோமோ வீடியோ!

ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் அடுத்த படைப்பாக வெளியாகயுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி, ஆபாச நடிகையாக நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

சூப்பர் டீலக்ஸ் 29 ஆம் தேதி வெளியாகயுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதால், இது விஜய் சேதுபதியின் முதல் ஏ சான்றிதழ் படமாக மாறியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் டிங் டாங் என்னும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை கண்ட பலரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாகவும், சிலர் ஒன்னும் புரியவில்லை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.