குழந்தை கடத்தல், உடல் உறுப்பு திருட்டை மையப்படுத்திய படம் – அவதார வேட்டை விமர்சனம்

நடிகர் வி.ஆர்.விநாயக்
நடிகை மீரா நாயர்
இயக்குனர் ஸ்டார் குஞ்சுமோன்
இசை மைக்கேல்
ஓளிப்பதிவு ஏ.காசி விஸ்வா
தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப்பட்டு உடல் உறுப்புகள் திருடப்படுகிறது. இதனை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க, நாயகன் வி.ஆர்.விநாயக் ராதாரவியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கிறார். பின்னர் வேறு ஊருக்கும் செல்லும் விநாயக் அங்கு சோனாவிடம் நற்பெயர் பெற்று அவரிடம் வேலைக்கு சேர்கிறார். விநாயக்குக்கும், அதே ஊரில் போலீசாக இருக்கும் நாயகி மீரா நாயரை பார்க்கும் விநாயக்குக்கு அவர் மீது காதல் வருகிறது. மீரா நாயர் மூலமாக ராதாரவி தன்னை ஏமாற்றிய விநாயக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இதற்கிடையே சோனாவையும் ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கிறார் விநாயக்.

கடைசியில், மீரா நாயர் விநாயக்கை பிடித்தாரா? விநாயக் யார்? ராதாரவி, சோனாவை ஏமாற்றி ஏன் பணம் பறித்தார்? குழந்தை கடத்தலை போலீசார் கண்டுபிடித்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

விநாயக், மீரா நாயர், ராதாரவி, ரியாஸ் கான், சோனா, பவர் ஸ்டார் சீனிவாசன், சம்பத், மகாநதி சங்கர் என படத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அவர்களது வேலையை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார்கள்.

உடல் உறுப்புகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்டார் குஞ்சுமோன். படத்திற்காக இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். படத்தில் காட்சிகள் வலுவானதாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

மைக்கேலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ஏ.காசி விஸ்வாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவுக்கு திருப்திகரமாக வந்திருக்கிறது.

மொத்தத்தில் `அவதார வேட்டை’ கோட்டைவிட்டது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.