சங்கீதம் கத்துக்க கூட தகுதி வேணுமா? “சர்வம் தாள மயம்” டிரைலர் வீடியோ!

சங்கீதத்தை மையமாக வைத்து இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘சர்வம் தாள மயம்’. ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகை அபர்ணா முரளி கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி நடிக்கும் படத்திற்கு முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி படம் ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலரை, நடிகர் தனுஷ் நேற்று வெளியிட்டார். சங்கீதம் கற்றுக்கொள்வதற்காக ஜி.வி.பிரகாஷ் போராடுவது, இதில் இருந்து, எந்த பிரச்சனைகள் வருகிறது என்பதை விளக்கும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.